மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. மழை குறைந்த காரணத்தாலும், பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாகவும் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவினை எட்டியது.

இதையடுத்து, 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி ஏற்கனவே நிரம்பியுள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: