பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: மருத்துவமனையில் தாய், சேய் அனுமதி

 

பெரம்பூர், ஜூலை 14: பெங்களூருவில் இருந்து சங்கமித்ரா விரைவு ரயில், நேற்று மாலை 3 மணியளவில் பீகாருக்கு சென்று கொண்டிருந்தது. இதில், பீகாரை சேர்ந்த மஜாகர் என்பவரின் மனைவியும், நிறைமாத கர்ப்பிணியுமான மேத்தாகாத் பயணம் செய்தார். பெரம்பூர் நோக்கி ரயில் சென்றபோது, திடீரென மேத்தா காத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அலறி துடித்தார்.

சக பெண் பயணிகள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில், ரயிலிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி பெரம்பூர் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அவர்கள் பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தனர்.

ரயில், அங்கு வந்து நின்றவுடன், தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள், இளம்பெண்ணையும், குழந்தையும் பத்திரமாக மீட்டு, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இளம்பெண்ணின் கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் குழந்தை மற்றும் தாய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: மருத்துவமனையில் தாய், சேய் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: