பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜூலை13: சி.ஐ.டி.யு மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் செயலாளர் நிசார் அகமது மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவுத் துறையில் உள்ள நியாய விலைக்கடைகளை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.அனைத்து வகை கூட்டுறவு ஊழியர்களுக்கும் அரசு அறிவித்துள்ள அரசாணைப்படி கருணை ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அனைத்து கூட்டுறவு ஊழியர்களுக்கும் போனஸ் சட்டத்தை திருத்தம் செய்து பயனளிக்கும் வகையில் அரசாணை வழங்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடை ஊழியர்களின் அடிப்படை தேவையான கழிப்பிட வசதி ஏற்படுத்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: