ஊட்டி ஏடிசி பகுதியில் தற்காலிக மார்க்கெட் இறைச்சி கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம்

 

ஊட்டி, ஜூலை 13: ஊட்டி ஏடிசி பகுதியில் தற்காலிக மார்க்கெட் இறைச்சி கடைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், அவைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் துவங்கப்பட்டள்ள நிலையில், பழைய மார்க்கெட்டில் இருந்து கடைகள் அகற்றப்பட்டு அவைகள் தற்போது ஏடிசி பகுதியில் உள்ள பார்க்கிங் தளங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக காலி செய்யப்பட்ட காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவைகள் தற்போது பார்க்கிங் தளம் நுழைவு வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் இருந்து முறையாக கழிவு நீர் வெளியேற்றப்படாத நிலையில், இந்த பார்க்கிங் தளங்களில் அங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும், இறைச்சி கடைகள் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் தற்போது ஏடிசி பஸ் நிறுத்தம் மற்றும் டேக்சி ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மார்க்கெட் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக பாதாள சாக்கடையில் செல்ல வழி வகை செல்ல வேண்டும். இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் துர்நாற்றம் வீசாத வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி ஏடிசி பகுதியில் தற்காலிக மார்க்கெட் இறைச்சி கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: