எனவே என்னைச் சந்திக்க வேண்டும் என்றால் மண்டி நாடாளுமன்றத் தொகுதியின் ஆதார் அவசியம். மேலும் வருகையின் நோக்கம், இது தொடர்பான விஷயமும் ஒரு கடிதத்தில் எழுதப்பட வேண்டும். அப்படி வந்தால் எந்த சிரமமும் இருக்காது. மக்கள் என்னிடம் எந்த விஷயத்தையும் கொண்டு வர சுதந்திரமாக அனுமதிக்கப்படுவர்’ என்றார்.
கங்கனா ரனாவத்தின் கருத்து குறித்து அவரிடம் தேர்தலில் தோற்றவரும், இமாச்சலப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறை அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், ‘எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், தனது தொகுதி மக்களிடம் ஆதார் அட்டையைக் கொண்டு வருமாறு கேட்பது நல்லதல்ல. சொந்த மாநிலத்தவராக இருந்தாலும் சரி, சுற்றுலாப் பயணியாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், அனைவரையும் சந்திக்க வேண்டும். என்னை மக்கள் சந்திக்க வேண்டும் என்றால், ஆதார் அட்டை தேவையில்லை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
The post என்னை சந்திக்கணுமா…? ஆதார் கொண்டு வாங்க… நடிகை கங்கனா சொல்கிறார் appeared first on Dinakaran.