திருப்பூர், ஜூலை 12: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மக்கள் தொகை உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில், உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ல் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய மக்கள்தொகை பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.
1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழுவால் இந்த நிகழ்வு நிறுவப்பட்டது.1987ம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, உலக மக்கள்தொகை ஐந்து பில்லியன் மக்களை அடைந்து, உலக மக்கள்தொகை தினம் குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம்,வறுமை, தாய்வழி, ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள்தொகை பிரச்சினைகளில் மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பேசினார். பிறகு, மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, திவாகர், ரேவதி, ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
The post உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.