திருப்பூர், ஜன.21: திருப்பூர் மாநகரில் ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கக்கூடிய வகையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. நொய்யல் ஆற்றின் நடுவே பாலத்திற்கான தூண்கள் கட்டப்பட்ட நிலையில் பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க யூனியன் மில் சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியை இணைக்கக்கூடிய பகுதியில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்க கூடாது என போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 சாலைகள் சந்திக்கும் அப்பகுதியில் பேருந்தை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பதாகை அப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்துகளை நிறுத்தக்கூடாது என போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.