இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை திறம்பட வழி நடத்திய ரோகித் சர்மாவுக்கானது. வீரர்களுடன் பேசும்போது, அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். அதை தனது பேட்டிங்கில் செயல்படுத்தி அணியை முன்னின்று வழி நடத்தினார். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பஸ்சில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை மறக்கவே மாட்டேன். இது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. மும்பையில் நடந்த கொண்டாட்டம் நம்ப முடியாத நினைவாகும்’’ என்றார். மேலும் தனது திருமணம் குறித்து குல்தீப் கூறுகையில், ”விரைவில் திருமணம் குறித்த நல்ல செய்தியை கூறுவேன். ஆனால், நிச்சயமாக அது ஒரு நடிகை அல்ல. நான் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் என்னையும், எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் நபராக இருப்பது முக்கியம்” என்றார்.
The post நிச்சயமாக நடிகையை திருமணம் செய்யமாட்டேன்: குல்தீப் யாதவ் பேட்டி appeared first on Dinakaran.