இதில் பிரான்ஸ் தனது 5 வாய்ப்புகளிலும் கோல் அடித்தது. ஆனால் போர்ச்சுகல் அணி 3 கோல்கள் தான் அடித்தது. இதனால் 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அந்நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு நடந்த மற்றொரு போட்டியில், சமபலம் வாய்ந்த ஸ்பெயின் – ஜெர்மனி மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் அட்டாக்கிங் பாணியில் விளையாடியதால், ஆட்டம் பரபரப்பானது. முதல் பாதியில் கோல்கள் அடிக்கப்படாத நிலையில் 2வது பாதியில் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேனி ஓல்மோ கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக 87வது நிமிடத்தில் ஜெர்மனியின் விர்ட்ஸ் கோல் அடித்து சமன் செய்தார்.
இதன்பின் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்ட நிலையில், 118வது நிமிடத்தில் ஸ்பெயினின் மைக்கில் மரினோ கோல் அடிக்க 2-1 என அந்த அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. சொந்த மண்ணில் ஜெர்மனி பரிதாபமாக வெளியேறியது. அரையிறுதியில் வரும் 9ம் தேதி நள்ளிரவில் பிரான்சுடன் ஸ்பெயின் மோதுகிறது. இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி போட்டியில், இங்கிலாந்து-சுவிட்சர்லாந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு நெதர்லாந்து -துருக்கி அணிகள் மோதுகின்றன.
The post யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி appeared first on Dinakaran.