அரியலூரில் 3 புதிய சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 5: அரியலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை மூன்று புதிய குற்றறவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குரைஞர்கள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 1 முதல் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 4 வது நாளான நேற்று அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வழக்குரைஞர்கள் ஆனந்தன், ராமலிங்கம் , விஜி, பாரி வள்ளல் , சுகுமார் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

The post அரியலூரில் 3 புதிய சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: