அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

சென்னை: 2024 ஆகஸ்ட் 24, 25 ஆகிய நாட்களில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்துகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துதல், 2 நாள் மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உறுதிசெய்தல், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்யும் பணிகள், மாநாடு குறித்து விளம்பரப்படுத்தும் பணிகள், மாநாட்டு அரங்கங்களின் வடிவமைப்பு மற்றும் அறுபடை வீடு கண்காட்சி அரங்கு தொடர்பான பணிகள், மாநாட்டு வளாகத்தில் ஏற்படுத்தப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை தயாரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். உரிய ஏற்பாடுகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: