ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு தீ வைப்பு: எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் போராட்டம்


திருமலை: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை கண்டித்து கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள பட்டிப்ரோலு பகுதியில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த சிலைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ பற்றி எரியும் சிலையை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் சிலை அருகே போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மாஜி எம்பி பிரசார வேனுக்கு தீ வைப்பு
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி மக்களவை தொகுதி முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. மார்கானி பரத் கட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரம் வாகனத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இது குறித்து மாநில டிஜிபிக்கு புகார் அளிக்கப்படும் என்று மார்கானி பரத் தெரிவித்தார்.

The post ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு தீ வைப்பு: எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: