ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புழல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மதிய உணவு இடைவேளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சோழவரம் வட்ட கிளை செயலாளர் கிறிஸ்டியான் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மீரா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலைஞர் கனவு இல்லம் வழங்கும் திட்டத்திற்கு தனியாக ஊழியர் கட்டமைப்பு வழங்கிடவும் , கணக்கெடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: