கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது

கெங்கவல்லி, ஜூன் 27: கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு புகார் வந்தது. அவரது தலைமையில் கெங்கவல்லி எஸ்ஐ செந்தில்குமரன் மற்றும் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடுவலூர் மயானத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், நடுவலூரைச் சேர்ந்த வெங்கடேஷ்(48) என்பவர், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, மறைத்து வைத்திருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: