வீடு, கடைகளில் தொடர் திருட்டு

இளம்பிள்ளை, ஜூன் 26: ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட கல்பாரப்பட்டி மற்றும் பெரியசீரகாபாடி பகுதியில் உள்ள வீடு, கடைகளின் முன் இருக்கும் இரும்பு மற்றும் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இதனால், மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வந்த நிலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் பட்டப்பகலில் டூவீலரில் வந்து பொருட்களை திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்ேடஷனில் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில், போலீசார் வீடியோ பதிவு காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post வீடு, கடைகளில் தொடர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: