திருக்குறள் பேச்சு போட்டி

சேலம், ஜூன் 26: மாணவர்களிடைடையே திருக்குறளின் கருத்துக்களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் அடுத்தமாதம் (ஜூலை) 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சேலத்தில், ஆகஸ்ட் 10 அன்று மரவனேரி பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் இடைநிலை 6 முதல் 8ம் வகுப்புகள், மேல்நிலை 9 முதல் 12ம் வகுப்புகள், கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post திருக்குறள் பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: