கர்நாடகா மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்வு: நாளை முதல் அமல்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.

அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு வருகிறது. 27 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, அதன் உறுப்பு பால் சங்கங்கள் மூலம் பால் பதப்படுத்தி வருகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் அனைத்து மாவட்ட பால் ஒன்றியங்களிலும் பால் சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது ஒரு கோடி லிட்டரை நெருங்குகிறது.

நாளை ஜூன் 26 புதன்கிழமை முதல் நந்தினி பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு (கேஎம்எஃப்) அறிவித்துள்ளது. KMF இன் படி, 500 மில்லி மற்றும் 1000 மில்லி பாக்கெட்டுகளில் கூடுதலாக 50 மில்லி பால் திருத்தப்பட்ட விலையில் கிடைக்கும். ஒவ்வொரு பாக்கெட்டின் விலையும் ரூ.2/- உயர்த்தப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், இம்மாதம் இரண்டாம் தேதி பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் தனது பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. அப்போது பால் சேமிப்பு செலவு அதிகரித்து வருவதாக மதர் டெய்ரி கூறியுள்ளது. இதை ஈடுகட்ட பால் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

 

 

 

 

The post கர்நாடகா மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்வு: நாளை முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: