காவல், வருவாய், மகளிர்களை உள்ளடக்கி கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும்

 

விழுப்புரம், ஜூன் 25: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 12 DL 2 உரிமங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறியுள்ள உரிமங்கள் ஏதும் இருந்தால் அதனை ரத்து செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளருக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறையினருடன் விவாதிக்க வேண்டும். வாரந்தோறும் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை கொண்டு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.வருவாய்த்துறை அலுவலர்கள் சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ரகசிய தகவல்களை அளிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை, மகளிர் சுய உதவிக்குழு, நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுக்கள் அமைத்து அவர்கள் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். பாண்டிச்சேரி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருளை தொடர்ந்து விற்பனை செய்து வரும் குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான புகார் அளிக்க அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச டோல் எண்.10581 மற்றும் வாட்ஸ்அப் எண் 9498410581 ஆகியவற்றை பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post காவல், வருவாய், மகளிர்களை உள்ளடக்கி கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: