திண்டுக்கல், நவ. 11: தமிழகத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் அனைவரும் எழுத்தறிவு பெறும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுடன் இணைத்து அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் உதவியுடன் இவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுக்கு தற்போது முதற்கட்ட பயிற்சிகள் முடிந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியத்தில், 1224 மையங்களில் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதிர். இதனை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 21 ஆயிரம் பேர் எழுதினர் appeared first on Dinakaran.