புகையிலை பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு

 

கோவை: கோவை நகர், புறநகரில் புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் விற்பனை உச்சத்தில் இருக்கிறது. நகரில் குறிப்பிட்ட சில வணிக பகுதிகளில் குடோன்களில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பதும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. தினமும் நகர், புறநகரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பொருட்கள் விற்பனையாகி வருகிறது. ஏரியாவிற்கு ஏற்ப சிலர் குடோன்களை அமைத்து அங்கேயிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை பொருட்களை இரு மடங்கு விலைக்கு விற்றாலும் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள். போதை பாக்குகளை கர்நாடக மாநில எல்லை, கேரள எல்லை பகுதி செக்போஸ்டில் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் எல்லைகளில் கடத்தி வரும் போதை பாக்குகளை ேசாதிக்க வேண்டும். டீலர்களை தடுத்தால் கடைகளில் போதை பாக்குகள் விற்பனையை வெகுவாக தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பாக்கு தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் போதை பாக்கு பயன்படுத்தாமல் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

The post புகையிலை பொருட்களை தவிர்க்க விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: