நாகர்கோவில், நவ. 11: குமரி மாவட்ட சூழல் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் கருத்தரங்கும் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கருத்தரங்கிற்கு மீண்டெழும் குமரி இயக்க நிர்வாகி தாமஸ் பிராங்கோ தலைமை வகித்து, டாக்டர் லால்மோகன் நினைவு மற்றும் குமரி மாவட்ட மலைகளும் மலைகளைச்சார்ந்த நிலமும் என்ற தலைப்பில் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி பென்னட் ஜோஸ் வரவேற்றார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் சோபனராஜ் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் குமரி மாவட்ட குளங்களின் இன்றைய நிலை மற்றும் டாக்டர் கிரப் நினைவு குறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுதாமணி மற்றும் குமரி மாவட்ட கடற்கரையும் அணுகனிம சுரங்கத் திட்டமும் டாக்டர் சந்தானகுமார் நினைவு குறித்தும் பத்ரன் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகர்கோவிலில் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் கருத்தரங்கு appeared first on Dinakaran.