கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 55 ஆக அதிகரித்ததுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி: விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: