முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!

நன்றி குங்குமம் தோழி

முகப்பருக்கள் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் அழுக்குகள் சேர்ந்தால் ஏற்படும் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த முகப்பரு நம் உடலில் உள்ள குறைபாடுகளாலும் பிரச்னைகளாலும் வருமென்பது தெரியுமா?

மேல் நெற்றி: மேல் நெற்றியில் பருக்கள் வருவது, சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடலில் பிரச்னைகள் உள்ளது என்பதை உணர்த்தும். மேல் நெற்றியிலுள்ள பருக்களைப் போக்க ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ள தக்காளி, பெர்ரி பழங்கள், செர்ரி பழங்கள், ஆப்பிள், எலுமிச்சை, க்ரீன் டீ இவைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

கீழ் நெற்றி: கவலை மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் கஷ்டப்படுபவர்களுக்கு, புருவத்திற்கு மேலே கீழ் நெற்றியில் பருக்கள் உண்டாகும். மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பதாலும், நல்ல தூக்கத்தை மேற்கொள்வதாலும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதாலும், மனஅழுத்தம், கவலைகள் நீங்கி முகம் பிரகாசமாவதோடு, பருக்களும் நீங்கும்.

புருவங்கள்: புருவங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருக்கள் வருவது கல்லீரல் சரியாக செயல்படுவதில்லை என்பதைக் குறிக்கிறது. கொழுப்புகள் நிறைந்த உணவுகளை குறைவாக உண்பதுடன், புகை பிடித்தல், மது அருந்துதலை நிறுத்த வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் உடல் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு கல்லீரல் பிரச்னைகள், பருக்கள் தடுக்கப்படும்.

கன்னங்கள்: கன்னங்களில் வரும் பருக்களுக்கும், நுரையீரல் செயல்பாட்டிற்கும் தொடர்புள்ளது. அதிகம் புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் பிரச்னைகளான ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி அதிகம் வருவதுடன் கன்னங்களில் பருக்களும் ஏற்படும். புகை பிடிப்பதை நிறுத்தினாலே கன்னங்களில் பருக்கள் வருவதை தடுத்து நுரையீரலையும் ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.மூக்கு: மூக்குகளில் பருக்கள் வருவது இதயத்துடன் சம்பந்தப்பட்டது. இதய நோய்க்கு வழிவகுக்கும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தப் பிரச்னையிலுள்ளவர்களுக்கு மூக்குகளில் பருக்கள் உண்டாகும். உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரித்து, மாரடைப்பிற்கு வழிவகுக்கும். கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொண்டு கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை சீராக பராமரித்தால் மூக்குகளில் பருக்கள் வருவதை தவிர்க்கலாம்.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

The post முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்! appeared first on Dinakaran.

Related Stories: