ஒன்றிய அரசை கண்டித்து செங்கல்பட்டில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் 100-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் என மூன்று சட்டங்களின் பெயரை மாற்றி 01.07.2024 அன்று முதல் இந்தி கலந்த சமஸ்கிரத மொழியில் மாற்றம் செய்கின்றது. இதனால் வழக்கறிஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இந்த மூன்று சட்டங்களை திருத்தம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வழக்கறிஞர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் எனற கோரிக்கை முன் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆனந்தீஸ்வரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் மதியழகன், மண்டல செயலாளர் பழனிசாமி, சொக்கலிங்கம், சோமசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து செங்கல்பட்டில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: