வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: வையாவூரில் வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக மாவட்ட செயலாளர் தி.வ.ஏழிலரசு, கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தி.வ.ஏழிலரசு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாயூர் ஊராட்சியில் கடந்த 14ம்தேதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு 2 பேர் பலியாகினர்.

ஊராட்சி நிர்வாகம் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து உண்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீருக்காக பயன்படும் கிணற்றை மூடி, ஆழ்துளை குழாய் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், வையாயூர் ஊராட்சி மீது தனி கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்னைகளை இனிமேல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பிரச்னைக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: