தேர்தலில் தொடர் தோல்விகளால் மக்களை சந்திப்பதற்கு பயப்படுகிறார் எடப்பாடி: டிடிவி கலாய்

மானாமதுரை: ‘தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க பயப்படுகிறார். அவரால் அதிமுக பலவீனமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் நேற்று கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுகிறார். 2019 இடைத்தேர்தலில் விதிமீறல்களை செய்து தான் பழனிசாமி வெற்றி பெற்றார். 2026லும் இதே தேர்தல் ஆணையம் தான் சட்டமன்ற தேர்தலை நடத்தப்போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதங்களை, புள்ளிவிபரங்களை தப்புத்தப்பாக சொல்லி வருகிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி திமுகவுக்கும், பாமகவுக்கும் தான். அங்கு அதிமுக நின்றால் 3வது, 4வது இடத்திற்குத்தான் செல்லும். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க பயப்படுகிறார். குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி மிக கடுமையாக சரிந்துவிட்டது. பழனிசாமி என்ற தீய மனிதரால் அதிமுக பலவீனமாக மாறிக்கொண்டு இருக்கிறது. பழனிசாமியின் தலைமையை பொதுமக்கள், தொண்டர்கள் புறம் தள்ளிவிட்டனர். கட்சியை இந்தளவுக்கு கொண்டு செல்வார் என உண்மையான தொண்டர்கள் எதிர்பார்க்கவில்லை. 2017ல் அமுமுக என்ன காரணத்திற்காக தொடங்கினோம் என்பது தெரியும். மீண்டும் ஒன்றிணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு தெரிவித்தார்.

The post தேர்தலில் தொடர் தோல்விகளால் மக்களை சந்திப்பதற்கு பயப்படுகிறார் எடப்பாடி: டிடிவி கலாய் appeared first on Dinakaran.

Related Stories: