தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது

திருமலை: தெலங்கானாவில் 16 வயது சிறுவனை சென்னைக்கு கடத்திச்சென்ற 2 குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை ஹனுமான் நகரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டு உரிமையாளரின் 16 வயது மகனை தனது காம வலையில் வீழ்த்தியுள்ளார். அதன்பிறகு சிறுவனை அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி கூறி செலவழித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையை சுற்றி பார்க்கலாம் என சிறுவனுக்கு அந்த பெண் ஆசைக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண் கூறியபடி சிறுவன் தனது வீட்டில் இருந்த நகை, பணத்தை பெற்ேறாருக்கு தெரியாமல் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண், இரவோடு இரவாக, தனது கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு சிறுவனுடன் சென்னைக்கு சென்றார். இதற்கிடையில் மகனை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வாடகை வீட்டில் இருந்த பெண்ணும் மாயமாகியிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் சித்திப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து சோதனையிட்டபோது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் சென்னைக்கு சென்ற போலீசார் அவர்களின் இருப்பிடத்ைத கண்டறிந்து அவர்களை கையும் களவமாக பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிறுவன் கொண்டு வந்த நகைகளை சென்னையில் விற்றுவிட்டு அந்த பணத்தில் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அவர்களை சித்திப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனை கடத்தியதாக ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது appeared first on Dinakaran.

Related Stories: