உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்க இலக்காக சர்வதேச அளவிலான பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை திட்டம்

சென்னை: சர்வதேச அளவிலான பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த உயர்கல்வி ஆய்வாளரான குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்) என்பவரால், அண்ணா பல்கலைக்கழகம், நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் உலக அளவில் 400 சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ளது. கியூ.எஸ் 2025ம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் படி, அண்ணா பல்கலைக்கழகம் 383 வது இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் கல்விசார் நடவடிக்கைகள், ஆசிரியர்-மாணவர் சதவிகிதம், சர்வதேச-பேராசிரிய விகிதம், சர்வதேச மாணவர்கள், சர்வதேச ஆராய்ச்சி நெட்வொர்க், நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு முடிவுகள் போன்ற பல்வேறு அமைப்புகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிப் பணிகளைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு பேராசிரியருக்கு மேற்கண்ட அடிப்படைகளில் பல்கலைக்கழகம் சரியான 100 மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், சர்வதேச மாணவர் மற்றும் பேராசிரியர் விகிதத்தில் அதன் மதிப்பெண் மிகக் குறைவாக உள்ளது.

மேலும் சர்வதேச மாணவர் விகிதத்தில், 1.3 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இந்த அளவுருவில் தனது மதிப்பெண்ணை மேம்படுத்த, அண்ணா பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை குறைத்துள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்) மூலம் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி வருகிறது. க்யூ.எஸ் தரவரிசையின்படி இந்தியாவின் முதல் 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் நாங்கள் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டு 600 முதல் 700 சர்வதேச மாணவர்களை எதிர்பார்க்கிறோம் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது, ​​அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 80 சர்வதேச மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு, பி.டெக் தவிர கணினி அறிவியல், ஐடி மற்றும் இசிஇ ஆகிய மூன்று பாடப்பிரிவுகளில் சேர்ந்தால், படிப்புக் கட்டணத்தில் 50% தள்ளுபடியை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் அதன் உலகளாவிய ரீதியை மேம்படுத்த சர்வதேச பேராசிரியர்களை இணைக்க முயற்சிக்கிறது. ‘‘எங்கள் பேராசிரியர் உறுப்பினர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். இந்த சர்வதேச பேராசிரிய உறுப்பினர்களில் சிலரை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை எங்கள் மாணவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்களில் சிலருடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு 427வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு 383வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில், க்யூ.எஸ் தரவரிசையின்படி உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடிப்பதை இலக்காக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்க இலக்காக சர்வதேச அளவிலான பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: