தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, (ரயில் எண் 06051) தாம்பரம்-ராமநாதபுரம் இடையே ஜூன் 21, 23, 28 மற்றும் 30ம் தேதி மற்றும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21, 26 மற்றும் 28ம் தேதி இரவு 7 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1, 6, 8, 13 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்திலிருந்து மதியம் 3 மணிக்கு இயக்கப்படும்.

இந்த ரயில், தாம்பரம்,செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ரூட்டி,கடலூர்,சிதம்பரம், சீர்காழி,வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, திருவாரூர், திருதுறைபூண்டி, முத்துபேட்டை, ஆதிரம்பட்டினம், பட்டுகோட்டை, காரைக்கால், சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

The post தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: