பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம் இன்றி கற்பதை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுவதையும், மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடிதம்: கல்விமுறை மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளிகளில் கற்பிக்கப்படுவதையும், மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி உட்கட்டமைப்பு, கல்வி சார்ந்த சேவைகள் மற்றும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கை, மாணவர் வருகை, பள்ளியில் இருந்து வெளியேறிய குழந்தைகள், ஹைடெக் லேப், தேர்வுகள், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், விழுதுகள், வாசிப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியர் தலைமையில் எஸ்.பி., திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வி பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்ய வேண்டும்.

The post பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம் இன்றி கற்பதை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: