முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு காங். எம்எல்ஏவாக தாரகை கத்பர்ட் பதவியேற்றார்: சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்


சென்னை: விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருந்த விஜயதரணி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்தார்.

இதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 4-ம்தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கத்பர்ட் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரூபிமனோகர், அசன் மவுலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு காங். எம்எல்ஏவாக தாரகை கத்பர்ட் பதவியேற்றார்: சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: