மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி பேராவூரணியில் நாளை ஜமாபந்தி துவக்கம்

 

பேராவூரணி , ஜூன் 12: பேராவூரணி வட்டத்தில் உள்ள, அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு 1433ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஜெயஸ்ரீ தலைமையில், பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் ஜூன் 13ம் தொடங்குகிறது.

ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமை பெருமகளூர் உள்வட்டத்திற்கும், 14ம் தேதி குருவிக்கரம்பை உள் வட்டத்திற்கும், 18ம் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 20ம் தேதி பேராவூரணி உள் வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும்.

பொதுமக்கள் தங்களது மனுக்களை, முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியாக cmhelpline-dashboard.tnega என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்களின் மூலமாகவோ, வருவாய் தீர்வாயத்தில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என பேராவூரணி தாசில்தார் தெய்வானை தெரிவித்துள்ளார்.

The post மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி பேராவூரணியில் நாளை ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: