திமுக நாடாளுமன்ற குழு புதிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக மட்டும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன், மாநிலங்களவை கொறடா வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, திமுக செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திமுக நாடாளுமன்ற குழு புதிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: