ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா – அமெரிக்கா இன்று பலப்பரீட்சை: ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேற முனைப்பு

நியூயார்க்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா அணிகள் இன்று இரவு மோதுகின்றன. ரோகித் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்து பாகிஸ்தானை 6 ரன் வித்தியாசத்திலும் வென்று ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. மொனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் தனது முதல் 2 ஆட்டங்களில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரிலும் வென்று 2வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி ‘சூப்பர் 8’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன. அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளை வீழத்திய உற்சாகத்தில் இருக்கும் அமெரிக்கா, சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே அமெரிக்க அணியை குறைத்து மதிப்பிட முடியாது. பந்துவீச்சுக்கு சாதகமான நியூயார்க் மைதான ஆடுகளத்தில், இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கும் இப்போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

* இதுவரை நடந்த ஆட்டங்களில் அதிக ரன் குவித்த முதல் 15 வீரர்களில் அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ் 136 ரன்னுடன் 2வது இடத்திலும், இந்தியாவின் ரிஷப் பன்ட் 78 ரன்னுடன் 13வது இடத்திலும் உள்ளனர்.
* அதிக விக்கெட் அள்ளியவர்கள் பட்டியலில் இந்தியாவின் பும்ரா, ஹர்திக் தலா 5 விக்கெட்களுடன் முறையே 6வது, 12வது இடங்களை பிடித்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் யாரும் டாப் 15ல் இல்லை.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்கள்), ஜஸ்பிரித் பும்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ்.

அமெரிக்கா: மொனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), அலி கான், கோரி ஆண்டர்சன், ஆண்ட்ரீஸ் கவுஸ் (விக்கெட் கீப்பர்), ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நாஸ்துஷ் கென்ஜிகே, நிதிஷ் குமார், மிலிந்த் குமார், சவுரவ் நேத்ரவால்கர், நிசார்க் படேல், ஷயன் ஜஹாங்கீர், ஸ்டீவன் டெய்லர், ஷேட்லி வான் ஷால்க்விக்.

The post ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா – அமெரிக்கா இன்று பலப்பரீட்சை: ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேற முனைப்பு appeared first on Dinakaran.

Related Stories: