வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை மழை தொடரும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக 15ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 15ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையி்ல வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை கடந்த வாரம் முழுவதும் பெய்ததால் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது. கடலூர், மதுரை, திருச்சி, வேலூர், மாவட்டங்களில் 3 டிகிரி வரையும், சென்னை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவள்ளூர், மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரையம் வெப்பநிலை குறைந்துள்ளது. சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 13ம் தேதி வரை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

The post வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை மழை தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: