மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுகோள்

ஈரோடு, ஜூன்9: ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வீரப்பன் சத்திரம் உப கோட்டம், வீரப்பன் சத்திரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட திருநகர் காலனி,கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர்,ராமமூர்த்தி நகர்,சிந்தன் நகர்,கமலா நகர் ஆகிய பகுதிகளுக்கு திருநகர் காலனி மின்பாதை வழியாக மின்னூட்டம் அளிக்கப்படுகிறது.  இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மாலை நேரங்களில் பட்டம் விடுவதால் பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கி கொண்டு தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுமக்கள் விட்ட பட்டம் சிக்கியதால் 19, 21, 22, 25 ஆகிய தேதிகளில் தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின் தடை ஏற்படுவதால் வ.உ.சி. பூங்காவில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே பட்டம் விடுவதை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: