சாலையோர கல்லில் பைக் மோதி மில் தொழிலாளி பலி

 

ஈரோடு, ஜூன் 15: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் மணி (30), இவர், தன்னுடைய மனைவி செண்பகம் மற்றும் 4 வயது குழந்தை கவுதம் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அஞ்சுராம் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

நேற்று, முன்தினம் மாலை மணி சென்னிமலைக்கு ஒரு வேலை விஷயமாக சென்றுவிட்டு தனது பைக்கில் சென்னிமலையிலிருந்து தான் வேலை செய்யும் இடத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஒரு வளைவில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி ரோட்டின் வலது புறம் உள்ள கிலோ மீட்டர் கல்லின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மணி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோர கல்லில் பைக் மோதி மில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: