அம்ரூத் குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்: ரயிலில் பெண் பயணி திடீர் சாவு

ஈரோடு,ஜூன்9: விருதுநகர் மாவட்டம் பாத்திமா நகரை சேர்ந்த மாரிமுத்து மனைவி பழனியம்மாள் (46). இவர், பெங்களூரில் உள்ள அவரது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் குடும்பத்துடன் பயணித்தார். ரயில் 7ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் 3வது நடைமேடைக்கு வந்தடைந்தது. அப்போது, பழனியம்மாள் சுயநினைவின்றி இருந்தார். இதையடுத்து பழனியம்மாளை அவரது குடும்பத்தினர் ரயிலில் இருந்து இறக்கினர்.

பின்னர், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே மருத்து அதிகாரி பழனியம்மாளை பரிசோதனை செய்தபோது, இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து ரயில்வே போலீசார் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியம்மாள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அம்ரூத் குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்: ரயிலில் பெண் பயணி திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: