மேட்டுப்பாளையத்தில் இன்று 21 கிமீ ஜாகிங் சென்ற அமைச்சர்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 21 கி.மீ. ஜாகிங் சென்றார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடியில் கட்டிய சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டிடம் மற்றும் உபகரணங்கள், ரூ.50 லட்சத்தில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் மற்றும் ரூ.22.75 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் நேற்றிரவே சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே கேட் அருகில் இருந்து ஜாகிங் சென்றார். பின்னர், அங்கிருந்து வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, தேவனாபுரம்,மேடூர், சாலை வேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு வழியாக தோலம்பாளையம் சென்றார். மொத்தம் 21 கிமீ ஜாகிங் சென்றார். அப்போது, அப்பகுதி அவ்வழியாக உள்ள கிராமங்களின் நிலை, சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தபடியே சென்றார். அமைச்சர் தங்களது கிராமப்பகுதிகளில் ஜாகிங் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.

 

The post மேட்டுப்பாளையத்தில் இன்று 21 கிமீ ஜாகிங் சென்ற அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: