இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,400க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,840க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனையாகிறது.
இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட அதிக விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post தங்கம் வாங்க நல்ல நேரம்.. அதிரடியாக ரூ.1,520 குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.53,200க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.