காங்கயம் அரசு கல்லூரியில் ஜூன் 10ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு

 

காங்கயம், ஜூன் 8: கல்லூரி முதல்வர் நஜீம்ஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காங்கயம் அரசு கலை அறிவியில் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பங்கள் வரப்பெற்று வரும் 10ம் தேதி அன்று பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், 340 காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம்,

பொருளாதரதம், பிபிஏ, பி.காம், பி.எஸ்சி, கணிதம், பி.எஸ்சி, கணினி அறிவியல் ஆகிய 7 பாட பிரிவுகள் உள்ளன.ஏற்கனவே, கணினி மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மாணவர் சேர்க்கையின் போது பிளஸ் 2 மாற்றுச்சான்று, ஜாதி, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post காங்கயம் அரசு கல்லூரியில் ஜூன் 10ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: