சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 10ம் தேதி பதவி ஏற்பு

காங்டோக்: 18வது மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்தின் 32 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. சிக்கிமில் பாஜவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து வந்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா(எஸ்கேஎம்) தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக 32 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. காங்கிரஸ், பாஜ கட்சிகள் படுதோல்வியடைந்தன. இதையடுத்து எஸ்கேஎம் கட்சி தலைவர் பிரேம் சிங் தமாங் நாளை மறுதினம் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 10ம் தேதி பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: