தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக, தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் என்பது மக்களவை தேர்தலிலும் வெற்றியாக எதிரொலித்து இருக்கிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்படும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமையவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: