முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றமா?.. மராட்டியம், உ.பி.யில் உள்ள முக்கிய தலைவர்கள் டெல்லி வருமாறு பாஜக மேலிடம் அழைப்பு!!

மும்பை : மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான ஆளும் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜ 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பாஜ கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜ தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று தான் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக தேவேந்திர பட்நவிஸ் அறிவித்துள்ளார். இதே போன்று உத்தர பிரதேச மாநிலத்திலும் பாஜக. 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையை இழக்க காரணமான 2 மாநிலங்களின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி வருமாறு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கும பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. பின்னடவை சந்தித்ததற்கான காரணம் குறித்தும், மகாராஷ்டிராவில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் கட்சியில் மாற்றங்களை செய்ய தலைமை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றமா?.. மராட்டியம், உ.பி.யில் உள்ள முக்கிய தலைவர்கள் டெல்லி வருமாறு பாஜக மேலிடம் அழைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: