புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான பதிவு கவுன்டர்கள் திறப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் புதிய உறுப்பினர்களுக்கான பதிவு கவுன்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளது. 18வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வௌியாகின. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த புதியவர்கள் மக்களவைக்கு தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர மக்களவை செயலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மக்களவை செயலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மதியம் முதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஜூன் 14ம் தேதி இரவு 8 மணி வரை கவுன்டர்கள் செயல்படும்.

இணையதளம் வாயிலாக உறுப்பினர்களின் வருகை பதிவு செய்யப்படும். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரா அல்லது ஏற்கனவே மக்களவைக்கு தேர்வானவரா என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்” என்று தெரிவித்துள்ளது.

The post புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான பதிவு கவுன்டர்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: