திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஓரிரு நாளில் அவற்றை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தங்கள் கட்சி கட்டாயம் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். இதனால் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறாராம். அதன்படி, மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிய துரை வைகோ தரப்பில் தனியாக ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளதாம். அதில் வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 தொகுதிகள் மதிமுகவுக்கு சாதகமான உள்ளதாக துரை வைகோ அடையாளம் கண்டுள்ளாராம்.
