ஆந்திராவில் மாபெரும் வெற்றி சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆந்திராவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்! தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் மாபெரும் வெற்றி சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: