மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

டெல்லி: மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள விவிபேட் இயந்திரங்களில் முழுவதும் பதிவான வாக்குகளை 100% எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வக்குபதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோம்கிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவு தொடர்பான ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையமானது அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது.

அதில் முக்கியமாக வாக்குபதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோம்கிராம்களை பறிசோதிக்கும் நடைமுறைக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளே பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களில் 5% இயந்திரங்களை பரிசோதனை செய்யளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பத்தை 7 நாட்களுக்குள் சம்பந்தபட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சம்பந்தபட்ட வேட்பாளர்கள் அளிக்க வேண்டும் என்றும், இதற்கு கட்டணமாக ரூ.40,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணமானது ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான நடைமுறையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

* இந்த பரிசோதனை நடைமுறைக்கான ஒரு அறையை தயார் செய்து முழுபாதுகாப்புடன் இந்த நடைமுறையானது மேற்கொள்ளவேண்டும்
* இந்த பணியானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும்.
* இந்த பணி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கும் மேசையில் உள்ள அனைத்தும் விடியோ பதிவு செய்யவேண்டும்.
* வேட்பாளர்கள், முகவர்களின் முன்னிலையில் இந்த பரிசோதனை நடைபெறவேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

The post மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: