(தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடக்கிறது திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில்

 

திருவண்ணாமலை, மே 31: திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம் வரும் 3ம் தேதி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடக்கிறது. அப்போது, கலைஞர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 3ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது. அதைஒட்டி, கலைஞர் சிலை அருகில் இருந்து ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்திற்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி., சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா ப.விஜயரங்கன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், தொமுச செயலாளர் க.சவுந்தரராஜன், செய்தித்தொடர்பு இணை செயலாளர் சிவ.ஜெயராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

The post (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடக்கிறது திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் appeared first on Dinakaran.

Related Stories: