வங்கியில் திருட முயன்ற பட்டதாரி வாலிபர் கைது

 

சேலம், மே 31: சேலம் பெரியகடைவீதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 16ம்ே ததி மாலை வங்கியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, வங்கியின் ஜன்னல் உடைக்கப்பட்டும், கதவு தள்ளப்பட்டும் இருந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் வங்கி அதிகாரிகள் புகார் ெதரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் வாலிபர் ஒருவர், வங்கியின் மாடிக்கு செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு கேமராவாக ஆய்வு செய்தபோது டூவீலரில் செல்லும் காட்சியை வைத்து விசாரித்தனர். இதில் வங்கியில் திருட முயற்சி செய்தது, கன்னங்குறிச்சி பச்சாரோட்டை சேர்ந்த வினோத்பிரதாப்(29) என்பதும், பி.காம் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். வேறு ஏதாவது குற்றச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

The post வங்கியில் திருட முயன்ற பட்டதாரி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: